Saturday, 9 May 2015

அகதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் ஜேர்மனியில் அதிகரித்துள்ளது



ஜேர்மனியில் அகதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் Thomas de Maizière தெரிவித்துள்ளார். ஜேர்மனிய உள்துறை அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலமே குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அகதிகள் மற்றும் அவர்களின் வீடுகள் மீதான தாக்குதலின் எண்ணிக்கை கடந்த 2013 ஆம் ஆண்டு 58 ஆக காணப்பட்டதாகவும், அது கடந்த 2014 ம் ஆண்டு 203 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவற்றில் சுமார் 175 தாக்குதலுக்கு அந்நாட்டின் வலது சாரி அமைப்பினரிற்கு தொடர்புள்ளமைக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 2014 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி, வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையுடன் சுமார் 1.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 2.4 சதவிகிதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...