Saturday, 9 May 2015

இந்தியா சீனாவிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பெண்டகன் தெரிவித்துள்ளது.



அமெரிக்கா: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு இருந்தாலும் எல்லை பிரச்சனையில் 2 நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவுவதாக அமெரிக்கா பாதுகாப்பு தலைமையகம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆசிய பிராந்திய அரசியல் நிலைமை குறித்து அமெரிக்கா பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் அரசியல் பொருளாதார உறவு வளர்ந்துள்ள போதிலும் 2 நாடுகளுக்கும் இடையேயான 4047 கிலோமீட்டர் நீளம்முள்ள எல்லையில் பதற்றம் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


குறிப்பாக அருணாச்சலபிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா காஷ்மீரில் உள்ள லடாக்கையும் தன்னுடைய பகுதியாக ஆக்கரமிக்க துடிப்பதாக அறிக்கை கூறுகிறது. சீன அதிபர் ஜின்பிங் இந்திய பயணத்தின் போது சீன படைகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவி 12 நாட்கள் முகாமிட்டு இருந்ததை சுட்டிகாட்டியதுடன் ராணுவ உதவியுடன் அண்டைநாடுகளின் பகுதிகளை ஆக்கரமிப்பது சீனாவின் வாடிக்கை என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஆக்கரமிப்புகள் பிற்காலத்தில் யுத்தங்களுக்கு வழி வகுத்தன என்பதால் இந்தியா சீனாவிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பெண்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
Loading...