நியூயார்க்: ஜூன் 30ம் தேதியான நாளை பூமி தனது வழக்கமான சுழற்சி வேகத்தை இழப்பதால் 1 வினாடி அதிகமாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனை மையமாகக் கொண்டு பூமி உட்பட சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் இயங்கி வருகின்றன.
பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனை ஒரு தடவை முழுமையாக சுற்றி முடிப்பதை ஓராண்டு என்கிறோம்.
பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்வது ஒரு நாள் எனக் கொள்ளப் படுகிறது. வழக்கமாக ஒரு நாளைக்கு 24 மணி நேரம் ஆகும்.
இந்த 24 மணி நேரத்தில் பகல் 12 மணி நேரமாகவும், இரவு 12 மணி நேரமாகவும் உள்ளது.
24 மணி நேரம்… அதேபோல், 24 மணி நேரமானது நிமிடம், வினாடி என்று பிரிக்கப்பட்டுள்ளது. 60 வினாடி நேரத்தை ஒரு நிமிஷம் என்றும், 60 நிமிடங்கள் என்பதை ஒரு மணி நேரமாகவும் கணித்துள்ளனர்.
-
