
முஸ்லிம் லிபரல் கட்சி தலைவர் இஸ்மா லெப்பை
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியுடன் முஸ்லிம் லிபரல் கட்சி கூட்டிணைந்து அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் தனது வேட்பாளர்களை இறக்கவுள்ளது , முஸ்லிம் லிபரல் கட்சி பலகாலமாக அம்பாறை மாவட்டத்தில் பல சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளதுள்ளதுடன் சமூகத்தில் நல்ல செல்வாக்கும் பெற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது . இதை முஸ்லிம் லிபரல் கட்சி தலைவர் இஸ்மா லெப்பை அவர்கள் எமது செய்தித் தளத்திற்க்கு உறுதிப் படுத்தியுள்ளார்.
ஏன் நீங்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியுடன் இணை கிறீர்கள் என்ற கேள்விக்கு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியினால் முன் வைக்கப் பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி கொள்கைளை தனது முஸ்லிம் லிபரல் கட்சி வரவேற்பதாகவும் மற்றக் கட்சிகள் பதவி மற்றும் அதிகரம்களை மட்டும் கைப்பற்றும் கொள்கைகள் கொண்ட கட்சிகளாகவே உள்ளது எனவும் குறிப்பிட்டார்
நேர்காணல் - முகமது அழீம்
