Tuesday, 16 June 2015

எகிப்தின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை

எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முகம்மது மோர்ஸிக்கு ஆயுள் தண்டனை வழங்கி அந்நாட்டின் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
null
ஜூன் 2ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, குற்றவாளிக் கூண்டில் இருக்கும் முன்னாள் அதிபர் மோர்ஸி
பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா, ஈரான் ஆகியவற்றுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மோர்ஸிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சகோதரத்துவக் குழுவின் தலைவரான கைரத் எல்-ஷதெர் உள்ளிட்ட அக்குழுவின் பிற பதினாறு உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு சிறை உடைப்பில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு அதற்காக மோர்ஸிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மரண தண்டனை விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை நீதிமன்றம் இன்னும் அறிவிக்கவில்லை. இது குறித்து, எகிப்தின் தலைமை மதகுருவின் கருத்திற்காக நீதிமன்றம் காத்திருக்கிறது.
இந்த தண்டனை அபத்தமானது என இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சி ஏற்கனவே விமர்சித்திருக்கிறது.
மோர்ஸியின் ஆட்சிக்கு எதிராக 2013ஆம் ஆண்டில் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடியதையடுத்து, அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
போராட்டக்காரர்களைக் கைதுசெய்து, சித்தரவதை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அதற்காக 20 ஆண்டுகால சிறை தண்டனையை அனுபவித்துவருகிறார் மோர்ஸி.
Loading...