இஸ்லாமிய நாடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் அமைப்பு அதற்காக பல தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த அமைப்பை கட்டுபடுத்த முடியாமல் மற்ற நாடுகள் திணறி வருகிறது. இந்நிலையில் இளைஞர்களை கவர்வதற்கு ஐ.எஸ் அமைப்பினர் புதிய பயிற்சி முறைகளை பின்பற்றி வருகின்றனர். இது தொடர்பாக ஏழு நிமிட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில், இளைஞர்களையும், சிறுவர்களையும் ஒரு கூண்டில் அடைத்துவிடுகின்றனர்.
பின்னர் அவர்களை நேருக்கு நேர் மோத விடுகின்றனர். கூண்டை சுற்றி ஆயுதமேந்திய ஏராளமானவர்கள் அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.
சில முகமூடி அணிந்த சிறுவர்கள் தங்கள் தலையால் கல்லை உடைக்கின்றனர். மேலும் சிலர் தற்காப்பு பயிற்சிகள், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர்.
இந்த வீடியோ ஈராக்கில் உள்ள ஐ.எஸ் அமைப்பின் தளத்தில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இது குறித்து பேராசிரியர் ஆண்டனி கிலீஸ் கூறியதாவது, இந்த வீடியோவின் மூலம் தாய்மார்கள் கூட மனம் மாறக்கூடும்.
தங்கள் குழந்தைகள் கோழைகளாக இருப்பதை விட ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து வீரனாக இருக்கலாம் என்று நினைக்க தொடங்கிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பயிற்சி அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளது மூலம் மற்ற நாடுகளை சேர்ந்த இளைஞர்களை கவர ஐ.எஸ் அமைப்பினர் முயற்சி செய்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
|
Monday, 22 June 2015
![]() |
கற்களை தலையால் உடைக்கும் சிறுவர்கள்: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மிரட்டல் பயிற்சி (வீடியோ இணைப்பு) |
Loading...
