Monday, 22 June 2015

ஆப்கான் பாராளுமன்றத்தில் தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல் (வீடியோ இணைப்பு)

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் 6 முறை சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சக்தி வாய்ந்த ராக்கெட் வெடிகுண்டு பெரும் சத்தத்துடன் வெடித்ததுடன் 6 முறை குண்டு வெடிக்கும் சத்தமும் கேட்டது.
தொடர்ந்து அங்கு துப்பாக்கி சூடும் நடைபெற்று வருகிறது. இதில்பாராளுமன்ற கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தது.
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது இத்தாக்குதல் நடைபெற்று வருவதால், அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விவரங்கள் தெரியாத நிலையில், இக்குண்டு வெடிப்பிற்கு தலிபான்கள் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு தாக்குதல்களில் 21 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Loading...