Monday, 22 June 2015

பதில் சொல்லாமல் தப்ப முடியாது


-வடபுலத்தான்
'மாற்றங்களைக் கொண்டு வந்த மகான்'. 'மாற்றங்களின் நாயகன்' 'ஆள் மற்றவையை மாதிரியில்லை. ரொம்பச் சிம்பிள். வித்தியாசமான ஆள்' என்றெல்லாம் வர்ணிக்கப்படும் மைத்m.srisenaதிரியினால் என்னமாதிரியான மாற்றங்கள் நாட்டுக்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் கிடைத்துள்ளன?tna sampanthan
இதைப்பற்றி மாற்றங்களுக்காக உண்மையாகவே பாடுபட்டவர்கள்தான் சொல்ல வேணும்.

1.மைத்திரி ஆட்சிக்கு வந்த பிறகு நல்லிணக்க முயற்சிகள் எந்த அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன?

2.அரசியற் கைதிகளின் விடுதலையில் என்னமாதிரியான மாற்றங்களும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது?

3.போர்க்குற்ற விசாரணை என்ன நிலையில் உள்ளது? அது நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டா? நிச்சயமாகவே போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்களா?

4.காணாமற் போனவர்களைக் கண்டு பிடிக்கக் கூடிய மாதிரியான நிலைமை உருவாகியுள்ளதா? இந்த ஐந்து மாதங்களில் எத்தனைபேரைப் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன?

5.வடக்குக் கிழக்கிலிருந்து குறைக்கப்பட்ட படையினரின் வீதம் என்ன? எந்தெந்தப் பிரதேசங்களில் படைக்குறைப்பு நடந்துள்ளது?

6.சிவில் வெளியொன்று உருவாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சிவில் வெளியின் தன்மை என்ன? அளவு என்ன?

7.'படைமயமாக்கலே வடக்கில் நடக்கின்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்' என்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சொல்வது சரியா, தவறா? விக்கினேஸ்வரன் சொல்வது சரியென்றால் மைத்திரி தவறு என்று அர்;ததம். விக்கினேஸ்வரன் சொல்வது தவறு என்றால் படைமயமாக்கலை அப்படியே விட்டு வைத்திருக்கும் மைத்திரியைப் பாதுகாத்துக் கொண்டு, விக்கினேஸ்வரனைக் கைவிடுவதாகப் பொருள். இதில் எது சரி? எது பிழை?

8.தமிழ் மக்களின் காணிகள் - உயர் பாதுகாப்பு வலயங்கள் எவ்வளவு விடுவிக்கப்பட்டுள்ளன? படைகளுக்கான காணி சுவீகரிப்பு இனிமேல் நிகழாதா?

9.சம்பூரிலும் வலி வடக்கிலும் மக்கள் ஏமாற்றப்பட்டது உண்மையா இல்லையா?

10.மகிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து மைத்திரி சிறிசேனவின் ஆட்சி எந்த வகையிலான வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது? அதாவது என்ன வகையான முன்னேற்றங்களைத் தந்திருக்கிறது?

11.19 ஆவது திருத்தத்தில் யாருக்கு அதிக நன்மைகள் உள்ளன?

12.புதிய தேர்தல் முறைமையினாலும் அதிகரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எண்ணிக்கையினாலும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் என்ன?

13.ஒட்டு மொத்தத்தில் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கும் புதிய அரசாங்கத்தினால் ஏற்பட்ட நன்மைகள் - அனுகூலங்கள் எத்தகையன?
இதுபோல பல கேள்விகள் சாதாரண மக்களாகிய எங்களின் மனதில் உள்ளன. இவற்றுக்கு தமிழ்த்தேசியப் புத்திஜீவிகளும் மாற்றத்துக்காக தங்கள் உயிரையும் உள்ளத்தையும் அர்ப்பணித்துப் பணியாற்றிய அரசியல் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும்
எங்களையெல்லாம் 'மாற்றத்துக்கு வாக்களியுங்கள்' அன்னத்துக்குத் தண்ணியல்ல, பால் கொடுங்கள்' என்று சொன்ன தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் பதில் சொல்ல வேணும்.
மைத்திரி எங்களுக்கு எதிரியென்று  இங்கே நாம் சொல்ல வரவில்லை. மைத்திரியைக் காட்டி எங்களை ஏன் ஏமாற்றுகிறீங்கள் என்றே சொல்ல வருகிறேன்.

'மாற்றங்கள் நிகழும். மாற்றங்கள் நிகழ வேண்டும்' என்று விரும்பிய சிறுபான்மைச் சமூகங்களுக்கு இதுவரையில் எத்தகைய மாற்றங்களை மைத்திரி தந்திருக்கிறார், ஏற்படுத்தியிருக்கிறார் என்பதைப் பற்றித் தயவு செய்து சற்று விளக்கினால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தெளிவாக வாக்களிக்க உதவியாக இருக்கும்.

இல்லையென்றாலும் பரவாயில்லை.

எங்களுக்கு எல்லாம் விளங்கிக் கொண்டு வருகிறது. எதிர்வரும் தேர்தலில் மட்டுமல்ல, எதிர்வரும் காலங்களிலும் இந்த மாதிரிப் பொய்ப் பூச்சாண்டியையும் புலுடாக்கதைகளையும் விடமுடியாது நீங்கள்.... என்பது....
 
Loading...