Wednesday, 17 June 2015

வீழ்ச்சிக்குத் தயாராகிறதா தங்கம்?

ர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த ஆறு மாதத்தில் சுமார் 4.5% குறைந்துள்ளது. இந்த விலை இன்னும் 10% முதல் 25% வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம், அமெரிக்காவின் வட்டி விகித குறைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலவிவரும் பொருளாதார மற்றும் கடன் சிக்கல் போன்ற பிரச்னைகள்தான்.
தங்கத்தின் விலை நடப்பு நிதியாண்டில் இறக்கம் காணும் எனத் தரக்குறியீடு வழங்கும் குழுமமான ஃபிட்ச்-ன் இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கத்தின் விலை எந்த அளவுக்கு இறங்க வாய்ப்பு இருக்கிறது என இந்த நிறுவனத்தின் அனலிஸ்ட் மற்றும் தலைமை இயக்குநர் (கார்ப்பரேட்ஸ்) தீப் என்.முகர்ஜி யிடம் கேட்டோம்.
‘‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம், நடப்பு ஆண்டில் தங்கத்தின் விலை இறங்கும் எனக் கணித்திருக்கிறது. இந்த விலை இறக்கம் என்பது அமெரிக்காவின் வட்டி விகித முடிவைப் பொறுத்து இருக்கிறது. அதாவது, அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், அமெரிக்காவில் மு
Loading...