Friday, 26 June 2015

மஹிந்தவை மைத்திரி சந்திக்கவில்லை: ஜனாதிபதி ஊடகப்பிரிவு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சபாநாயகரின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 
இருவருக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அப்பிரிவு தெரிவித்துள்ளார்.

Loading...