சீன அரசு நடத்தும் லாட்டரி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மொத்த வருமானத்தில் கால் பங்கு வருமானம் கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட முன்னூறு பில்லியன் டாலர்கள் வரை இப்படி கையாடல் செய்யப்பட்டு, கார்களுக்காகவோ, வெளிநாட்டு பயணத்துக்காகவோ, புதிய அலுவலகங்களுக்காகவோ செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லாட்டரி திட்டம் குறித்து முதல்முறையாக விரிவான கணக்காய்வுகள் செய்யப்பட்டபோது இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கையாடல் செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதி தற்போது புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சூதாடுவது என்பது சீனாவில் சட்டவிரோத நடவடிக்கை. ஆனால் (அரசு நடத்தும்) லாட்டரி திட்டம் உள்ளிட்ட சிலவற்றுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறது.