Tuesday, 30 June 2015

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிம் லிபரல் கட்சி


திர்வரும் பொதுத் தேர்தலில்  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சிக்கு முஸ்லிம் லிபரல் கட்சி  ஆதரவு  தெரிவத்துள்ளது.முஸ்லிம் லிபரல் கட்சி பலகாலமாக அம்பாறை மாவட்டத்தில் பல சமூக சேவைகளில் ஈடு பட்டுள்ளதுடன்  சமூகத்தில் நல்ல செல்வாக்கும் பெற்றுள்ளது   என்பது இங்கு குறிப்பிடத் தக்கது . இதை முஸ்லிம் லிபரல் கட்சி தலைவர் இஸ்மா லெப்பை அவர்கள்  எமது செய்தித் தளத்திற்க்கு உறுதிப் படுத்தியுள்ளார்.

ஏன் நீங்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியினால் முன் வைக்கப் பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி கொள்கைளை தனது முஸ்லிம் லிபரல் கட்சி வரவேற்பதாகவும் மற்றக் கட்சிகள் கடந்த 15 வருட காலமாக பதவிகளையும் மற்றும் அதிகரம்களை யும் மட்டும் கைப்பற்றும்  கொள்கைகள் கொண்ட கட்சிகளாகவே உள்ளது எனவும் குறிப்பிட்டார் 

முஸ்லிம் லிபரல் கட்சி தலைவர் இஸ்மா லெப்பை








ஹலீம் -கொழும்பு  



Loading...