Friday, 12 June 2015

'குடியேறிகள் வருவதை தடுக்க அனைத்தையும் செய்வோம்' - ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவுக்குள் ஆட்கள் சட்டவிரோதமாக குடியேறி வருவதை தடுக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட்
ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட்
ஆஸ்திரேலிய கடற்கரைகளை குடியேறிகள் படகுகள் வந்தடைவதை தடுக்க ஆக்கத்திறனுடனான யுக்திகள் அனைத்தையும் தாம் கையாள்வோம் என்றும், அவை வெற்றிகரமான வழிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
படகுகளில் வரும் குடியேறிகள்
படகுகளில் வரும் குடியேறிகள்
ஒரு படகில் வந்த குடியேறிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப, ஆஸ்திரேலியா முப்பதினாயிரம் டாலர்கள் லஞ்சமாக வழங்கியதாக இந்தோனேசிய பொலிஸ் தலைமை அதிகாரி குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய பிரதமரின் இந்தக் கருத்து வந்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் நியூசிலாந்தை நோக்கி படகில் சென்று கொண்டிருந்த தம்மை, வழி மறித்த ஆஸ்திரேய அதிகாரிகள், தமது படகு ஓட்டிகளுக்கு லஞ்சக் கொடுத்து, தம்மை ரகசியமாக இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பியதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய இலங்கயை சேர்ந்த தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
Loading...