|
நாடாளுமன்றத்திற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கும் நோக்குடன் இந்த விஷேட அமர்வு நடைபெறவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி தனித்து போட்டியிடுவதாக அல்லது கூட்டு சேர்ந்து போட்டியிடுவதா என்பது தொடர்பிலும் நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 6ஆம் திகதிமுதல் கோரப்படவுள்ளன. இந்நிலையில், கட்சிகள் அவசரமாக தமது உயர்மட்டக் குழுவை கூட்டி ஆராய்ந்து தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
Monday, 29 June 2015
![]() |
முஸ்லிம் காங்கிரஸ் நாளை தமது முடிவை அறிவிக்கும் |
Loading...
