இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகராக கடமையாற்றிய ஜனாப். அஸ்மி ஸெய்னுதீன் தனது கடமையிலிருந்து ஓய்வு பெற்று நாடு திரும்புவதை முன்னிட்டு இளம் மாதர் முஸ்லிம் சங்கம் கடந்த வாரம் (30.1.2016) அன்னாருக்கு கொழும்பு ரமடா ஹோட்டலில் விருந்துபசாரம் ஒன்றை நடத்தியது.
இளம் மாதர் முஸ்லிம் சங்க தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மலேசிய உயர்ஸ்தானிகரான அஸ்மி ஸெய்னுதீன் அன்னாரின் பாரியாரான பாஸா அஸ்மி வைஎம்எம்ஏ இயக்க தேசியத்தலைவர் எம் சலீம் முன்னாள் தலைவரான காலித் பாரூக்இ ஹலீம் ஏ.அஸீஸ் மற்றும் இளம் மாதர் முஸ்லிம் சங்க செயலாளரான தேசமான்ய மர்ளியா சித்தீக்இ பொருளாளரான தேசமான்ய பவாஸா தாஹா உட்பட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்
இந்த வைபவத்தின் போது மலேசிய உயர் ஸ்தானிகர் அஸ்மி ஸெய்னுதீன் -பாஸா அஸ்மி தம்பதிகளுக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் கையளிக்கப்பட்டது.
தகவல்:- நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்





