
சபூர் ஆதம்
பொதுபலசேன முஸ்லிம் மக்களுக்கு அட்டூளியங்களை செய்த போதல்லாம், அதற்காக பகிரங்கமாக குரல் கொடுத்தவர்தான் டாக்டர் ராஜித சேனாரத்ன இப்போது எம்மில் பலருக்கு இனவாதியாக மாறிவிட்டார். மு.கா. தலைவரைப் பற்றி அவர் சொன்ன செய்திதான் அதற்கு காரணம். இதை அறிவு ரீதியாக அனுக வேண்டுமே தவிர, அரசியல் இலாபம் தேடும் ஒரு சில கூஜா தூக்கிகளின் கதைகளைக் கேட்டு முட்டாள் தனமாக இனவாத முத்திரை குத்த வேண்டிய தேவை இல்லை, ராஜித உண்மையில் ஒரு இனவாதியல்ல. மட்டுமல்லாது சிறுபான்மையினருக்காகக் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர். எப்போதும் முஸ்லிங்களோடு தோளோடு தோல் நின்றவர். இவரைப் பற்றி களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தினரிடம் கேட்டால் அறிந்து கொள்ளலாம்.
ரவுப் ஹக்கீமின் அதி மோக பதவி ஆசையைத்தான் ராஜித இங்கு குறிப் பிட்டார் அன்றி இனவாதத்தை அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும் ,ஏன் ராஜித அவ்வாறு கூறினார் எனின் கடந்த காலம் களில் ரவுப் ஹக்கீமின் கட்சி தாவல்கள் பதவி பெறுவதையே நோக்காகக் கொண்டது என்பதினால் , இதை நாமும் அறிவோம் .
சிறுபான்மை இனங்கள் பாதிக்கப் படுகின்ற விதத்தினையும் எமது பக்க நியாயங்களையும் அவருக்கு சிறந்த முறையில் தௌிவுபடுத்துவதே எமது கடமையே ஒழிய அதைவிடுத்து எடுத்த எடுப்பில் இனவாத முத்திரை குத்த முற்படுவது ஒரு வரலாற்று தவறுக்கு இட்டுச் செல்லும். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் எமது முஸ்லிம் தலைவர்களுக்குச் செய்த தவறை நாம் மற்றவர்களுக்கு செய்து விடக் கூடாது என்பதை விளங்கிச் செயற்படுவது நல்லது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச கட்சி அமைப்பாளர் சபூர் ஆதம் கூறினார்
NDPHR ஊடகப் பிரிவு