Monday, 29 June 2015

சிறுபான்மை கட்சிகளுக்கு மைத்திரி கட்சி வலை விரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எஸ்.பி. திஸாநாயக்க தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தல் தந்திரோபாயங்களை வகுக்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு இன்றைய தினம் முதல் சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஏற்கனவே அங்கம் வகித்த மற்றும் வகிக்காத சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்புக்கள் நடத்தப்பட உள்ளன. மூன்று நாட்ளுக்குள் இந்த பேச்சுவார்த்தைகள் முடிவுறுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜித சேனாரட்ன, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர்இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ms s
Loading...