எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இதுவரையில் 14 சுயாதீனக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
சிறிலங்காவின் தேர்தல்கள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், அம்பாறை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் சுயாதீனக்குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
நாளை மறுதினம் முதல் அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|