Friday, 3 July 2015

ஏன் கழுகின் மீது காகம் பயணம் செய்ய வேண்டும் ?


நமது  சிறுபான்மைக் கட்சி , நாம் சிறுபான்மைச் சமூகம் , எமது கலாச்சாரம் , எமது ஆன்மிக மதம் என்பவற்றைப் பாது காக்கவே எமது கட்சி என்று தொண்டை கிழியக்  கத்தி ஒரு சிறுபான்மைச் சமூகத்தை சூடேற்றி  சூடேற்றி  தேர்தல் காலம் வந்தால்  அக் கொள்கைகள் எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு பதவிக்காக பேரின வாதத்துடன் கெஞ்சிக் கூத்தாடி ஓன்று கூடுவது கூடிய பிறகு  இச் சிறுபான்மைச் சமூகம்  அதன் பின்னால் அலை அலை என்று அலைவது  இவை எல்லாவற்றையும்  கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது உண்மையில் இச் சிறுபான்மைச் சமூகம் முழு முட்டால்கள்தான்.

இவ்வாறன நடவடிக்கை சிறுபான்மைக் கட்சி தலைமைக்கு தனது சமூகத்தின் மீது நம்பிக்கை இல்லாமையை இங்கு வெட்ட வெளிச்சமாகக் காட்டுகின்றது 

ஐக்கிய தேசியக் கட்சி என்னும் கழுகின் மேல் காகம் என்னும் முஸ்லிம் காங்கிரஸ் பயணிக்க எத்தனிப்பு ஏன் என்பதுதான் எனது கேள்வி ?

அப்படி ஆயின் இக் கட்சி சிறுபான்மைச் சமூகத்துக் தேவைதானா? , இது மக்களுக்கான கேள்வி 

இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா எம்மிடம்  கூறினார் 



நிந்தவூர் -இல்யாஸ் 



Loading...