Monday, 6 July 2015

விக்டோரியா மகாராணியார் அணிந்திருந்த ஒரு ஜோடி உள்ளாடைகள் ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளன.

null
ஏலத்துக்கு வரும் விக்டோரியா மகாராணியின் உள்ளடை
பருத்தித் துணியிலான இந்த அரைக் கால்சட்டை 45 அங்குல இடுப்புச் சுற்றளவு கொண்டவை. இந்த உள்ளாடைகள் பிரிட்டனின் வில்ட்ஷயர் பகுதியில் ஏலத்தில் விடப்படுகின்றன.
மிக நீண்டகாலம் ஆட்சிபுரிந்த பிரிட்டிஷ் மகாராணியார் என்ற புகழைப் பெற்ற விக்டோரியா மகாராணியார் இளமைக் காலங்களில் மெலிந்த உடலமைப்பைக் கொண்டிருந்தார்.
எந்த வயதில் 45 அங்குல இடுப்பளவான இந்த உள்ளாடைகளை அவர் அணிந்திருப்பார் என்ற கேள்விக்கு அவரின் புகைப்படங்களை ஆதராமாகக் கொண்டு முடிவுகள் எட்டப்பட்டன.
மகாராணியார் முதுமைக் காலங்களிலேயே உடல் பருமனடைந்திருந்தார் என்பதுடன் வாழ்நாளின் கடைசி 10 வருடங்களுக்குள்ளேயே இந்த உள்ளாடைகளை அவர் அணிந்திருக்க கூடும் என அதை ஆய்வு செய்துள்ளவர்கள் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் படி 1891 களிலேயே 45 அங்குல சுற்றளவான உடைகளை அவர் அணிந்திருப்பார் என கணிப்பிட்டுள்ளதாக ஏலதாரர் எட்மன்ட் கூறினார்.
null
மகாராணியின் உள்ளாடையில் அரச முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது
அந்த உள்ளடைகளில் விக்டோரியா மகாராணியாரின் வி ஆர் எனப்படும் அரச இலச்சினை, தையல் வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன.
ஜூலை மாதம் 11 ஆம் தேதி அன்று ஏலத்திற்கு வர உள்ள இந்தப் பாண்டுகள் பல்லாயிரக் கணக்கான பவுண்டுகள் விலைக்குப் போகலாம் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக ஏலதாரர் ரிச்சார்ட் எட்மொண்ட் கூறுகிறார்.
விக்டோரியா மகாராணியாரின் பணியாளர்களின் பரம்பரையில் வந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட இந்தப் உள்ளாடை 125 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஏலதாரர் எட்மன்ட் தெரிவிக்கிறார்.
குறிப்பாக 1901 இல் விக்டோரியா மகாராணியார் மரணமடைந்த பின்னர் அவரது உடைகள் அரச குடும்பத்துக்காக பணி யாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறிய ஏலதாரர் எட்மன்ட் அவற்றில் அரச குடும்பத்தின் இலச்சினைகளும் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நடைபெவுள்ள இந்த ஏலத்தில் விக்டோரியா மகாராணியார் மற்றும் அவரது மகள் இளவரசி அலிஸ் ஆகியோர் அணிந்திருந்த இரவு ஆடைகள், காலுறைகள் மற்றும் பாதணிகளும் விற்கப்பட உள்ளன. அவை இன்னமும் நல்ல தரத்தில் உள்ளததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் கென்ட்டில் நடைபெற்ற ஏல விற்பனையில் ஏலமிடப்பட்ட விக்டோரியா மகாராணி பயன் படுத்தியியிருந்த பட்டினால் ஆன உள்ளாடை ஒன்று 6200 பவுண்டுகளுக்கு ஏலத்திற்கு போயிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading...