Sunday, 12 July 2015

சுதந்திர கட்சி தேசிய பட்டியலில் கருணாவுக்கு இடம்












விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) தேசியப்பட்டியலில் இடம் வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கு இதற்கான உறுதிமொழியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் வழங்கியுள்ளதாக கருணா தெரிவித்துள்ளார்.


இந்தநிலையில் மட்டக்களப்பில் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் கட்சியின் சார்பில் போட்டியிடுவுள்ளதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கியமை தொடர்பில் கருணா, ஜனாதிபதியை பாராட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Loading...