Wednesday, 15 July 2015

காற்றில் கரைந்த மெல்லிசை


காற்றில் கரைந்த மெல்லிசை









சென்னை, 15 ஜூலை-  உடல்நலக் குறைவால் நேற்று காலமான இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதனின் நல்லுடல் இன்று சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
  1200 படம்களுக்கு மேல் இசையமைத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு உண்டு. இரண்டு தலைமுறை இசையமைப்பாளர்களுக்கான வழிகாட்டியாகத் திகழ்ந்த எம்.எஸ்.வி, நேற்று அதிகாலை 4.15 மணியளவில் காலமானார்.
இதனையடுத்து, அவரது நல்லுடல் சென்னை, சாந்தோமில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  பெரும்பாலான  திரை பிரபலங்களும்,  அரசியல் கட்சி தலைவர்களும் எம்.எஸ் விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 இன்று காலை இசையமைப்பாளர் எஸ்.ஏ ராஜ்குமாரின் இசை அஞ்சலிக்குப் பின் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.  சாந்தோம்  வீட்டில் இருந்து பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு அவரது நல்லுடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

 பின்னர் அவரது நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.  மறைந்த எம்.எஸ்.வி-க்கு  மரியாதை செலுத்தும் வகையில்,  தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் இன்று ஒரு நாள் படப்பிடிப்புகளை ரத்து செய்திருந்தது. 
Loading...