Wednesday, 8 July 2015

தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள நீண்ட சுவரைக் கட்டுகிறது துனீசியா

ஜிகாதி தீவிரவாதிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் லிபியாவுடனான எல்லைப் பகுதியில் சுவர் ஒன்றை எழுப்பும் திட்டத்தை துனீசியா அறிவித்துள்ளது.
null
துனீசியாவில் தாக்குதல் நடைபெற்ற பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுகின்றன
அதிலும் குறிப்பாக 160 கிலோமீட்டர் தூரம் கொண்ட எல்லையின் ஒரு பகுதி மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று துனீசியப் பிரதமர் ஹபீப் எஸித் தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுவர் ஆண்டின் இறுதிக்குள் கட்டப்படும் எனவும் துனீசியப் பிரதமர் கூறுகிறார்.
தீவிரவாதத்துக்கு எதிரான தமது அரசின் உத்திகளை விளக்குவது குறித்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றிலேயே இத்தட்டத்தை துனீசியப் பிரதமர் தெரிவித்தார்.
கடந்த மாதம் சூஸ் நகரின் கடற்கரைப் பகுதியில் 38 சுற்றுலாப் பயணிகள், இஸ்லாமிய அரசு குழுவால் தூண்டப்பட்ட தீவிரவாதி ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றதை அடுத்து துனீசிய அரசின் இந்த முன்னெடுப்பு வந்துள்ளது.
லிபியாவில் நிலவிவரும் அரசியல் குழப்பங்களைத் தமது ஆதாயத்துக்குப் பயன்படுத்தி வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளால், அந்தக் கொலைகளை நடத்திய நபர் பயிற்சி அளிக்கப்பட்டவர் என்று நம்பப்படுகிறது.
Loading...