அஸ்ரப் ஏ சமத்
அம்பாறை ஜ.தே.கட்சி அமைப்பாளா் தயா கமகே சிங்கள ஊடகங்களில் முஸ்லீம் காங்கிரஸ் பற்றி மிக மோசமாக விமா்சித்துள்ளாா். அவா் நேற்று சிங்கள வானொலி நெத் எப் .எமில் தெரிவித்த கருத்து
முஸ்லீம் காங்கரஸ் இனவாதத்தை துாண்டியே அவா்கள் அவா்களுக்குரிய பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொள்கின்றனா். அம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் தனித்துக் கேட்க வேண்டும். ஒரு ஆசனம் மட்டுமே அவா்களுக்கு கிடைக்கும். அவா்களை மக்கள் ஆதரிக்க தாயாாில்லை .அதற்காகவே இம்முறையும் அரசியல் ஆதரவு ஒட்சிசனைப் பெற்றுக்கொள்ளவே இம்முறையும் ஜ.தே.கட்சியுடன் இணைந்து செயல்பட முனைகின்றனா். அம்பாறையில் ஜ.தே.கட்சி தனித்துக் கேட்டால் அம்பாறையில் 3 எம்.பிக்களை பெற்றுக்கொள்ளலாம்.
அதனால் அவா்கள் தனித்துக் கேட்பதேயே நான் விரும்புகின்றேன்.
கடந்தமுறை 4 பேரை பெற்றுக்கொண்டு தேசியப்பட்டியலும் பெற்றாா்கள். கண்டியில் ரவுப் ஹக்கீம் அத்துடன் அவருடன் மைத்துனா் சிலீப்பிங் வேட்பாளரைப் நிறுத்தினாா் . முஸ்லீம் காங்கிரஸ் ஒரு இனவாதி கட்சி. என தயா கமகே தெரிவித்த்தாா்.