மத நிந்தனைக்கு எதிரான தமது சட்டங்களை ஐஸ்லாந்து நாடாளுமன்றம் ரத்துச் செய்திருக்கிறது.
அந்த நாட்டின் கிறிஸ்தவ திருச்சபைகள் சிலவற்றின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அந்தச் சட்டங்களை நாடாளுமன்றம் நீக்கியிருக்கிறது.
இண்டர்நெட் மற்றும் தகவல் சுதந்திரத்துக்காக போராடும் சிறுபான்மை கட்சி ஒன்றினால் இதற்கான பிரேரணை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது.
பிரான்ஸில் அரசியல் நையாண்டி சஞ்சிகையான சார்ளி எப்தோ மீது தாக்குதல் நடந்த அதே மாதத்தில் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
தண்டனைக்கு பயப்படாமல் தமது கருத்துக்களை மக்கள் வெளியிட வாய்ப்பளிக்கும் ஒரு சுதந்திர சமூகத்துக்கு இது அவசியம் என்று அந்த கட்சி கூறியுள்ளது.
1940ஆம் ஆண்டு முதல் ஐஸ்லாந்தில் மத நிந்தனைக்கு எதிரான சட்டங்கள் அமலில் இருந்து வந்தன.