|
பதவிக்காக காலத்திற்கு காலம் கட்சி விட்டு கட்சி மாறுகின்ற அமைச்சர் ராஜித, எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களை பதவிக்காக மதத்தைக் கூட மாற்றிக் கொள்வார் என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய கூற்றாகும். இது ஒட்டு முஸ்லிம்களையும் அவமானப்படுத்துகின்ற ஒரு விசமனத்தனமான கருத்தாகும்.
முஸ்லிம் சமூகத்தில் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி பதவி பட்டம் பணத்திற்காகச் சமயத்தைத் துறக்கமாட்டான். இலங்கை வரலாற்றில் அப்படி எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக எவர் மதம் மாறினார்களென்பதை வர-லாற்றைப் புரட்டிப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே முஸ்லிம் சமூகத்தை அவமதித்துள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர முன்வர வேண்டும் என்று கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
இவரது கூற்றின் படி ஹக்கீம் பதவிக்காக கட்சி தாவ வில்லையா ? ராஜித கூறியது முஸ்லிம் சமூகத்தைப் பற்றி அல்ல , தனி பட்ட நபர் ஹகீமை நோக்கி மட்டுமே என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்
அஸ்மின் -கொழும்பு
|
Thursday, 2 July 2015
![]() |
மீண்டும் குட்டையைக் கிளப்பும் நிஸாம் காரியப்பர் , கூறப் பட்டது தனி நபருக்கே |
Loading...
