கதிர்காம யாத்திரிகர்களை அவமதிக்கும் வகையில் கிழக்கிலுள்ள முஸ்லிம் பகுதிகளில் சில சம்பவங்கள் இடம்பெற்றமை கவலையளிக்கும் விடயமாகும் என்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கு, கிழக்கிலிருந்து கதிர்காமத்துக்கு இந்து மத பக்தர்கள் வருடந்தோறும் பாத யாத்திரை செல்வது வழக்கமாகும். இம்முறையும் இந்து மத பக்தர்கள் பெருமளவானோர் பாதயாத்திரை சென்றிருந்தனர். இவ்வாறு பாதயாத்திரை சென்றவர்கள் கிழக்கில் முஸ்லிம் பகுதிகள் சிலவற்றில் கேலிக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவமானப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான செயற்பாடு கண்டிக்கத்தக்கதாகும். ஒரு மதத்தினரின் செயற்பாடுகளை மற்றைய மதத்தினர் மதிக்க வேண்டும். இதன்மூலமே நாட்டில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த முடியும். இதனை விடுத்து பாதயாத்திரிகர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வது முறையான செயற்பாடல்ல. இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள நடத்தப்பட வேண்டும் என்றுள்ளது
|
Saturday, 4 July 2015
யாத்திரிகர்களை அவமதிக்கும் வகையில் கிழக்கிலுள்ள முஸ்லிம் பகுதிகளில் சில சம்பவங்கள் |
Loading...