Friday, 24 July 2015

துப்பாக்கிகளை கட்டுப்படுத்த முடியாதது விரக்தியளிக்கிறது: ஒபாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா
மெரிக்க அதிபர் ஒபாமா தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு அமெரிக்க அதிபராக மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
கென்யாவுக்கான தனது இந்தப் பயணம், கிழக்கு ஆப்ரிக்காவில் நிலவிவரும் தீவிரவாதத்துக்கு எதிரான சண்டையில் அமெரிக்காவின் ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாக அமையும் என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
எனினும் கென்யாவில் இருந்துவரும் ஒருபாலுறவுக்காரர்களுக்கு எதிரான துன்புறுத்தல், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் ஆகிய பிரச்சனைகளுக்கு எதிராக தான் வெளிப்படையாக பேசவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கிப் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடுகளை இன்னமும் அமல்படுத்த முடியாமல் இருப்பது தனக்கு விரக்தியளிப்பதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் துப்பாக்கிப் பயன்பாடு தொடர்பிலான தனது கருத்தை பிபிசிக்கு தெரிவித்த சில மணி நேரத்தில், தென் மாநிலமான லூசியானாவில் திரையரங்கு ஒன்றில் நடந்த ஒரு துப்பாகித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.
Loading...