அன்பார்ந்த அம்பாறை மாவட்ட வாக்காளப் பெருமக்களே
இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் அல்லது அதன் வேட்பாளர்களினால் முன் வைக்கப்படும் பல தரப் பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். நாம் நம்புவது என்றால் அவர்கள் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனின் அவர்களை பதவியில் இருந்து தூக்கி எறியும் ஆயுதமான அவர்களது இராஜினாமாக் கடிதம் எங்கள் கையில் இருக்கவேண்டும் .
நீங்கள் தான் இப்போது அவர்களுக்குப் பதவிப் பிச்சை போடுபவர்கள் ,அவர்கள் பிச்சை வாங்குபவர்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள் இச் சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள் . அவர்களது ராஜினாமாக் கடிதங்களை உங்கள் கையில் எடுங்கள் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப் படாவிடின் எங்களால் அவர்களை பதவியில் இருந்தும் தூக்கி எறிய முடியும் . அதுதான் எமது ஆயுதம் .
இவர்கள் அவ்வாறு எங்களிடம் ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கத் தவறின் அவர்களுக்கு வாக்குப் போட்டு நீங்கள் அவர்களிடம் பிச்சைக்காரர் ஆக விருப்பமா ? என்பதையும் யோசியுங்கள்
எங்களது தாரக மந்திரமான சொல்வதை செய்வோம் செய்வதையே சொல்வோம் என்பதற்கு இணங்க நாங்கள் எங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொன்னதை சொன்ன காலத்தில் செய்து தருவோம் செய்து தராவிட்டால் எங்களது பதவிகளை துக்கி வீசிவிட்டு வெளியேறுவோம் என தேசிய ஜனநாயக கட்சி இத்தால் உங்களுக்கு உறுதி அளிக்கிறது .
எங்களது கட்சியின் வெற்றி பெறும் வேட்பாளர்கள் அவர்களது திகதி இடப்பட்ட ராஜினாமாக் கடிதங்களை உங்களிடம் சமர்ப்பிப்பார்கள் என்பதையும் இங்கு கூறிக் கொள்ள விருப்புகிறோம்
ஒட்டகச் சின்னம் இம்முறை ஆட்சிக்கு வர உங்கள் தேவைகள் நிறைவேற எமக்கு வாக்கு அளிப்பது உங்கள் கையில்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா

