இலங்கையின் வாக்குறுதிகளை மட்டும் வைத்து முடிவுகளை எடுக்கமாட்டோம், அதன் செயற்பாடுகள் மற்றும் அடைவுகளை வைத்தே அது தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி.
திருகோணமலைக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அவர், அங்கு செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிடுகையில், ஜனவரி 8 ஆம் நாள் நடந்த அரசியல் மாற்றத்தின் பின்னர் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நா.வுடனும் அமெரிக்காவுடனும் இணைந்து செயற்பட சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பாக அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக கண்காணிக்கும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
|
Saturday, 29 August 2015
![]() |
இலங்கையின் வாக்குறுதிகளை மட்டும் வைத்து முடிவுகளை எடுக்கமாட்டோம்-ரொம் மாலினோவ்ஸ்கி. |
Loading...
30.05.2015 - Comments Disabled
11.12.2015 - Comments Disabled
23.05.2015 - Comments Disabled
01.06.2015 - Comments Disabled
07.07.2017 - Comments Disabled