Sunday, 27 September 2015

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப் பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப் பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

பதுளை, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்கு நாட்டில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. . 

இதேவேளை மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அவசர அனர்த்தங்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
Loading...