இலங்கையின் தீர்மானத்திற்கு பிரித்தானியா வரவேற்பு
இலங்கையின் தீர்மானத்திற்கு பிரித்தானியா வரவேற்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உத்தேச தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது.
தீர்மானத்திற்கு ஆதரவளிக்க இலங்கை அரசாங்கம் எடுத்தத் தீர்மானம், முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் முனைப்புக்களின் ஓர் கட்டமாக கருதப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் இலங்கை குறித்த உத்தேச தீர்மானம் வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் சில திருத்தங்களுடன் புதிய உத்தேச யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.