Thursday, 1 October 2015

சிரியாவில் ரஷ்யா மீண்டும் விமானத் தாக்குதல்

சிரியாவில் தற்போது மீண்டும் ரஷ்யப் படைகள் வான் தாக்குதல்களை நடத்திவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
Image captionசிரியாவின் வட மேற்குப் பகுதியில் ரஷ்யா புதிய தாக்குதலை நடத்தியிருக்கிறது.
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை இலக்காக வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தாலும், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
ரஷ்ய ராணுவத்தின் ஆதரவு, போரின் போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ரஷ்யப் படையினருக்கும் அமெரிக்கப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக அவ்விரு நாட்டு படைகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமையன்று ரஷ்யா வான் தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்காவுக்கு முன்னெச்சரிக்கை வழங்கப்படவில்லையென அந்நாடு குற்றம்சாட்டியிருந்தது.
Loading...