கடந்த 25 வருடகாலமாக வடக்கு மக்கள் பல துன்பங்களை எதிர் நோக்கிய போது வாக்களித்த மக்கள் படும் துன்பங்கள் பற்றி சிந்திக்காத மர கட்சி ஹகீம் தலைமையிலான அணி இன்று வந்து வடக்கு மக்களின் குடி நீர் பிரச்சினைகள்,அபிவிருத்திகள் இடம்பெயர்ந்த மக்களின் வாக்கு பிரச்சினைகள் மற்றும் இன்னும் பல விடயங்கள் பற்றி பேசுவதை பார்க்கும் போது ஹகீமுக்கு வடக்கு மக்களை மீண்டும் ஏமாற்றும் காலம் வந்து விட்டதாக தெரிகின்றது.
இந்த மர கட்சி ஹகீமை நம்பி நாங்கள் இன்னும் ஏமாறுவதா?
வடக்கு மக்களை மீண்டும் ஏமாற்ற தான் ஹகீம் வன்னி நோக்கி வருகை தருகின்றாரா?
இந்த ஹகீமால் வன்னி மக்கள் கண்ட அபிவிருத்தி தான் என்ன?
கடந்த காலத்தில் ஹகீம் சொன்னவற்றை வன்னி விடயத்தில் நிறைவேற்றினாரா?
இந்த ஹகீமுக்கு நிங்கள் சொல்லும் புத்தி தான் என்ன?
