மனித உரிமைகள் அமைப்பு அலுவலகம் யாழில் திறந்து வைப்பு
யாழ். மாவட்ட மனித உரிமை அமைப்பு அலுவலகம் நேற்று யாழ். திருநெல்வேலியின் சந்தைக்கு அருகாமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் டாக்டர் அஜிம் கலந்து கொண்டு குறித்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் நிகழ்வில் மனித உரிமையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை பலரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
