Sunday, 15 November 2015

மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் நாளை முன்னெடுப்பு

மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் நாளை முன்னெடுப்பு
மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் நாளை முன்னெடுப்பு
மது மற்றும் போதைப்பொருள் பாவனையற்ற நாட்டை உருவாக்கும் நோக்கில், நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய திட்டத்தின் மூன்றாவது கட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை(திங்கட்கிழமை) காலை 9.00 மணிக்கு கேகாலையில் ஆரம்பமாகவுள்ளது.

கேகாலை புனித சூசையப்பர் மகளிர் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரை இலக்கு வைத்து பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் தவிர்ப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் மதிப்பீட்டுக்குட்படுத்தப்படவுள்ளனர். மது மற்றும் போதைப்பொருள் பாவனையற்ற மாவட்டமாக கேகாலை மாவட்டத்தை மாற்றும் பொருட்டு அம்மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...