Sunday, 15 November 2015

அடர்த்தியான கூந்தலைப் பெறுவதற்கு

சிலருக்கு முடி அடர்த்தி இல்லாமல் இருக்கும். இதற்கு முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதது தான் முக்கிய காரணம். அதிலும் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இக்காலத்தில் முடி அதிகம் கொட்ட ஆரம்பிக்கும். எனவே இக்காலத்தில் சரியான பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும்.
hardboiled_eggs
முட்டை

ஒரு பௌலில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி, அதில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடிக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, முடியின் அடர்த்தி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
baking
பேக்கிங் சோடா

தினமும் தலைக்கு குளிப்பவராக இருப்பின், ஷாம்புவிற்கு பதிலாக, 3-4 ஸ்பூன் பேக்கிங் சோடாவை 3/4 கப் நீரில் கலந்து, அதனைக் கொண்டு முடியை அலச வேண்டும். இது நல்ல ஷாம்பு போன்று செயல்படுவதோடு, முடியின் அடர்த்தியையும் மேம்படுத்தும்.
banana
அவகேடோ மற்றும் வாழைப்பழம்

அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் பழங்களில் உள்ள வைட்டமின்கள் மயிர்கால்களுக்கு கிடைத்து, முடி நன்கு வலிமையோடும், அடர்த்தியாகவும் இருக்கும்.
08-natural-oils-600
தேங்காய் எண்ணெய்

பழங்கால முறைப்படி தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதனைக் கொண்டு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதைக் காணலாம்
oooood
ஓட்ஸ்

முடிக்கு கண்டிஷனர் போடும் போது, அந்த கண்டிஷனருடன் ஓட்ஸை பொடி செய்து சேர்த்து, பின் போட்டு வந்தால், முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
images (1)
வெங்காய சாறு

வெங்காயச் சாறு முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் பொருட்களுள் சிறப்பான ஒன்று. இது முடி உதிர்வதையும் குறைக்கும். எனவே வெங்காய சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை தலையில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலசி வருவது நல்ல பலனைத் தரும்.
Loading...