|
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரணைமடு பாதுச்சந்தை உள்ளிட்ட தாழ் நிலங்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பிரதான வீதிகளை நிரவி வெள்ளம் பாய்வதால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்ட்டுள்ளதாகவும் முறிகண்டியை அண்மித்த சல்வபுரம் கிராமத்தில் வடிகான் அமைப்பு மேற்காள்ளப்படுவதால் சில வீடுகளிற்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இரணைமடு குளத்தின் சகல வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், ஏனைய சிறு குளங்களும் வான் பாய்ந்து வருகின்றன.
அக்கராயன் குளம் வான் பாய்வதால் முறிகண்டி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Wednesday, 2 December 2015
![]() |
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு |
Loading...
