Wednesday, 2 December 2015

தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பத்தினர்


சினிமா திரையரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்ட போது, எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பத்தை, அங்கிருந்தவர்கள் திரையரங்கை விட்டு வெளியேற்றிய சம்பவம் நாடு முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. மும்பையிலுள்ள பி.வி.ஆர் திரையரங்கில், படம் ஆரம்பிக்கு முன்பு தேசிய கீதம் போடப்பட்டதாகவும், அப்போது எல்லோரும் எழுந்து நின்றபோது, ஒரு முஸ்லிம் குடும்பம் மட்டும் எழுந்து நிற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த கூட்டத்தினர், தேசிய கீதத்தை இஸ்லாமிய குடும்பத்தினர் அவமதித்ததாக கூறி, திரையரங்கத்தை விட்டு, அவர்களை வெளியேறுமாறு கூச்சலிட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சில மக்கள், அவரை சினிமா திரையரங்கை விட்டு செல்லுமாறு கூச்சல் போட்டனர்.

அவர்கள் வெளியேற்றப்பட்டது சரியே என்று சிலரும், திரையரங்கு போன்ற இடங்களில் தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டிய அவசியம் இல்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Loading...