Wednesday, 2 December 2015

சுவையான சிக்கன் மஞ்சுரியன்

சுவையான சிக்கன் மஞ்சுரியன்

போன்லெஸ் சிக்கன் – ½ கிலோ

குடை மிளகாய் – 2 அல்லது 3 (உங்கள் ரசனைக்கேற்ப)
பெரிய வெங்காயம் – 2 அல்லது 3 (உங்கள் ரசனைக்கேற்ப)
தக்காளிச் சோஸ் – 2 அல்லது 3 குழிக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
பூண்டு (உரித்தது) – ஒரு கையளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 கரண்டி
மிளகாய்த்தூள் – 2 கரண்டி
மைதா மாவு – ஒரு கையளவு

Chicken manjurian 9
சோள மாவு – ஒரு கையளவு
முட்டை – 2
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1 கரண்டி
கேசரி பவுடர் – ½ கரண்டி
எண்ணெய் – 250 ML

** முதலில் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட போன்லெஸ் சிக்கனை ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பிசைந்து நன்றாக கழுவிக்கொள்ளலாம். (மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் எப்போது அசைவம் செய்தாலும் அதைக்கழுவும்போதே மஞ்சள் தூள் போட்டு பிசைந்து கழுவுவது ஆரோக்கியமான ஒன்று…)
Chicken manjurian 2 (1)
** உரித்த பூண்டை மெல்லிய சிலைஸ் சிலைஸாக வெட்டிக் கொள்ளலாம். சிக்கன் மஞ்சுரியனுக்கு வெங்காயத்தையும் குடை மிளகாயையும் வெட்டும் முறை மிக முக்கியமானது. வெங்காயத்தை ஒவ்வொரு லேயராக உரித்து சதுர வடிவிலான துண்டுகளாக வெட்டிக்கொள்ளலாம். குடை மிளகாயையும் அவ்வாறே… பச்சை மிளகாயை உங்களுக்கு விருப்பமான விதத்தில் வெட்டிக்கொள்ளலாம்.
** ஒரு கிண்ணத்தில் ஒரு கையளவு சோள மாவையும், ஒரு கையளவு மைதா மாவையும் கொட்டி அதில் சிறிதளவு உப்பும், கேசரி பவுடரும் சேர்த்து அதன் மீது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் ஊற்றி பிசைந்து கொள்ளவேண்டும்.
Chicken manjurian 3
** இப்படிப்பிசைந்த கலவையுடன் இப்போது சிக்கன் துண்டுகளையும் போட்டு பிசைந்து கொள்ளலாம்.
Chicken manjurian 4
** இப்படிப்பிசைந்த சிக்கன் துண்டுகளை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்…
Chicken manjurian 5
** அதன்பிறகு ஒரு ஃப்ரை பேனிலோ இல்லை கடாயிலோ சிக்கனைப்பொறித்த எண்ணையையே ஒரு குழிக்கரண்டி விட்டு எண்ணைய் சூடானவுடன் முதலில் நறுக்கிய பூண்டுகளை போட்டு வதக்கவும்.
** பூண்டு சிறிது வதங்கியதும் அதில் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்துண்டுகளையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். அடுத்து அதனுடன் நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கவும்.
Chicken manjurian 6
** இப்போது இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு, அரை ஸ்பூன் கேசரி பவுடர் ஆகியவற்றைப்போட்டு வதக்கவேண்டும். இது சிறிதளவு வெந்தவுடன் இதில் ஒரு குழிக்கரண்டி தக்காளி சாஸ் விட்டு வதக்கவும். அடுத்து இதில் ஒரு கப் தயிர் விட்டு தேவைப்பட்டால் சிறிது தண்ணீரும் விட்டு வதக்கவும்.
Chicken manjurian 7
** தயிர் இந்த வதங்கலில் நன்றாகக்கலந்து கரைந்ததும் ஏற்கனவே பொறித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை இதில் கொட்டி நன்றாக வதக்கவும். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வெந்தவுடன் மீண்டும் ஒருமுறை ஒரு குழிக்கரண்டி தக்காளி சாஸ் விட்டு வதக்கி இறக்கிவிட்டால் சிக்கன் மஞ்சுரியன் ரெடி…
Chicken manjurian 8
(தேவைப்பட்டால் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை வதக்கும்போதே சோயா சாஸ்ம், சிறிது வினிகரும் சேர்த்து வதக்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை
Loading...