Saturday, 9 January 2016

கடந்த அரசு 18ஆவது திருத்தச்சட்டத்தினை ஒரே இரவில் நிறைவேற்றியது

கடந்த அரசு 18ஆவது திருத்தச்சட்டத்தினை ஒரே இரவில் நிறைவேற்றியது
கடந்த அரசு 18ஆவது திருத்தச்சட்டத்தினை ஒரே இரவில் நிறைவேற்றியது
கடந்த அரசாங்கம் 18ஆவது திருத்தச்சட்டத்தினை ஒரே இரவில் நிறைவேற்றியதாக பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், முன்னைய அரசாங்கம் போன்று இல்லாமல் தற்போதைய அரசாங்கம் அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் முழு நாடாளுமன்றை தெளிவுபடுத்தி மக்களின் அனுமதியுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்.

கடந்த அராங்கம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்பட்டிருந்தது.எனினும், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அவ்வாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயக விரோத தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
அரசாங்கம், தற்போதைய அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க முயற்சித்தால் எவரும் நீதிமன்றின் உதவியை நாட முடியும்.

இதேவேளை,மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகளின் போது, இன்று நாடாளுமன்றை அரசியல் அமைப்பு பேரவையாக மாற்றும் யோசனைத் திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியிருந்தார்.அந்த உறுதிமொழியின் அடிப்படையில் ஜனாதிபதி இன்று குறித்த யோசனையை முன்வைப்பார் என தெரிவித்துள்ளார்
Loading...