Tuesday, 26 January 2016

அழிந்து விட்ட வேற்று கிரகவாசிகள்: விஞ்ஞானிகள் தகவல்

வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? அல்லது இல்லையா? என்ற சர்ச்சை விஞ்ஞானிகள் இடையே தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், வேற்று கிரகவாசிகள் உயிருடன் இருந்திருக்கிறார்கள்.  ஆனால், அவmarsர்கள் ஏன் நம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை எனில், அவர்கள் முன்பே அழிந்து விட்டனர் என அறிவியலாளர்கள் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலை கழகத்தின் வானியல் உயிரியியலாளர்கள் கடந்த வாரம் நடந்த கூட்டம் ஒன்றில், அண்டத்தில் உயிர்வாழ கூடிய சூழல் கொண்ட எண்ணற்ற கோள்கள் உள்ளன.  அதேவேளையில், பிறரை தொடர்பு கொள்ள கூடிய நிலையை எட்டுவதற்கு முன்பே பல வேற்று கிரகவாசிகள் இறந்திருக்க கூடும் என கூறியுள்ளனர்.

ஆதித்ய சோப்ரா என்ற நிபுணர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த அண்டம் ஆனது உயிர் வாழ கூடிய பல கோள்களை கொண்டிருக்கலாம்.  அவற்றில் வேற்று கிரகவாசிகள் வாழ்ந்திருக்கலாம் என பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  பெரும்பான்மையான கோள்களின் சுற்றுசூழல் என்பது ஆரம்பகாலத்தில் நிலையற்ற தன்மையில் இருந்துள்ளது.  உயிர்வாழ கூடிய சூழல் கொண்ட கிரக உருவாக்கத்திற்கு, நீர் மற்றும் கரியமில வாயு போன்ற பசுமை வீடு வாயுக்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை உயிரினங்களுக்கு ஏற்பட்டது.

இத்தகைய ஒழுங்கு நிலையினால் மேற்பரப்பு வெப்பநிலை சமநிலையில் இருக்கும்.  ஆரம்பகால வாழ்க்கை என்பது அச்சுறுத்தலான நிலையில் இருந்தது.  அதனால், இது வேகமுடன் நடந்திருப்பதற்கான வாய்ப்பு குறைவு என நாங்கள் நம்புகிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், நம்மை தொடர்பு கொள்ள கூடிய வகையில் வேற்று கிரகவாசிகள் உயிருடன் இல்லை என ஆஸ்திரேலிய தேசிய பல்கலை கழகத்தின் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவர்கள், 4 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், பூமியுடன் தொடர்புடைய அருகிலுள்ள கோள்களான வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகியவற்றில் உயிரினங்கள் வாழ கூடிய சூழல் இருந்திருக்கும்.  எனினும், இரு கிரகங்களிலும் காலநிலை மிக மோசமடைந்து இருக்கும்.  வெள்ளி அதிக வெப்பம் நிறைந்தும் மற்றும் செவ்வாய் அதிக குளிர் நிறைந்த நிலைக்கும் மாறியிருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.

வேற்று கிரகவாசிகளை குறித்த தேடலில் ஈடுபடும் எஸ்.ஈ.டி.ஐ. என்ற அமைப்பின் வானியியலாளர் சேத் சொஸ்தக் என்பவர் கூறும்பொழுது, ஆரம்பகாலத்தில் சில கோள்களில் ஆர்மகெடான் (நன்மை மற்றும் தீமைக்கிடையேயான போர்) சில நேரங்களில் நடந்திருக்க கூடும்.  எனினும், மாற்றம் ஆனது வேற்று கிரகவாசிகள் கூட்டத்தை குறைத்திருக்கும்.  காலப்போக்கில் அது அழிந்து போயிருக்கும் என நான் கருதுகிறேன்.

இன்னும் 65 மில்லியன் வருடங்களில், பாலூட்டிகளான சிறிய எலிகள் பெரிய அளவில் உருமாறியிருக்கும் என நான் கருதுகிறேன்.  வேறு வழியில் கூறுவதெனில், அருகிலுள்ள கோள்கள் இல்லாத நிலையிலும், உயிர் வாழ்வதற்கு ஏற்ற நேரம் போதிய அளவில் உள்ளது என அவர் கூறுகிறார்.
Loading...
  • இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாக். பீதி !'11.06.2015 - Comments Disabled
  • Paddy Purchase Only By Permit: The Best Solution!18.09.2015 - Comments Disabled
  • இலங்கை வந்தடைந்த இங்கிலாந்து அணி01.10.2018 - Comments Disabled
  • மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.06.07.2015 - Comments Disabled
  • லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு மகிந்தவுக்கு அழைப்பாணை?31.05.2015 - Comments Disabled