சொமாலியத் தலைநகர் மொகதிஷுவில்கடலோரத்து உணவு விடுதிகளில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இருபது பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாலைப் பொழுதில் இந்த விடுதிகளை ஒட்டி இரண்டு கார் குண்டுகள் வெடித்ததுடன், உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது ஆயுததாரிகள் ஐந்து பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இறந்தவர்களைத் தாண்டி மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
கண்மூடித்தனமாக ஆயுததாரிகள் சுட்டதையும், மாடியில் இருந்து ஜன்னல் வழியாகக் குதித்து மக்கள் தப்பித்ததையும் சம்பவத்தைக் கண்டவர்கள் வர்ணித்துள்ளனர்.
இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக அல்-ஷபாப் அமைப்பு தெரிவித்துள்ளது.
