நல்லெண்ண அடிப்படையில், சீனப் போர்க்கப்பல்கள் மூன்றும் இந்தியப் போர்க்கப்பல்கள் இரண்டும் கொழும்புத் துறைமுகத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) வந்தடைந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
லியுஷோஷூ, சன்யா, குயின்ஹாய்ஹூ ஆகிய சீனக்கப்பல்களும் தரங்கனி மற்றும் சுதர்சினி ஆகிய இந்தியக் கப்பல்களுமே கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.
சீனக்கப்பல்கள், எதிர்வரும் 21ஆம் திகதிவரை தரித்து நிற்கும் எனத் தெரிவித்துள்ள கடற்படை, இந்தியக்கப்பல் இன்று பயணமாகிறது எனத் தெரிவித்துள்ளது.
