Tuesday, 19 January 2016

எல்லை நிர்ணயம் விரைவில் நிறைவு செய்யப்படும்

எல்லை நிர்ணயம் விரைவில் நிறைவு செய்யப்படும்
எல்லை நிர்ணயம் விரைவில் நிறைவு செய்யப்படும்
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகு விரைவில் நடாத்த நடவடிக்கை எடுக்குமாறும், எல்லை நிர்ணய பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறும் ஜனாதிபதி தனக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய முறையில் நடத்தவிடாதிருக்க சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதனை நிறுத்த யாராலும் முடியாது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்தே இந்த முடிவை எடுத்துள்ளமையினால், தேர்தல் உரிய முறையில் நடாத்தப்படும்.இதன்படி, எல்லை நிர்ணயம் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெற்றதன் பின்னர் அது குறித்த அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடப்படும். 

அத்துடன், எதிர்வரும் ஜுன் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.
Loading...