நாடாளுமன்றை அரசியல் நிர்ணய சபையாக மாற்ற விரைவில் தீர்மானம்
நாடாளுமன்றத்தினை அரசியல் நிர்ணய சபையாக மாற்றுவதற்கான அனுமதியை கோரும் தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் சனிக்கிழமை சமர்ப்பிப்பார் என அரசமைப்பு நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசாங்கம் தற்போதைய அரசமைப்பினை மீறி இந்த விடயத்தில் செயற்படுகின்றது என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்த முயல்கின்றனர். எனினும் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் அரசமைப்பின் கட்டமைப்பிற்குள்ளேயே இடம்பெறுகின்றன. அரசமைப்பு நிர்ணயசபை புதிய தேர்தல் நடைமுறைகள் மற்றும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு ஆகியவற்றிற்கான அடிப்படையை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
