அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கண்டி மாவட்டத்திலிருந்து 191 யோசனைகள்
கண்டி மாவட்டத்திலிருந்து 191 யோசனைகள் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசியலமைப்பு திருத்தம் குறித்து மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அக்குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக பேராசியர்கள், முன்னாள் நகரசபைத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்நதவர்களிடமிருந்து இவ்வாறான கருத்துக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதேவேளை இன்று மாத்தளை மாவட்ட செயலகத்தில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
