Wednesday, 3 February 2016

தேசிய தினவாழ்த்துச் செய்தி -தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஊடக பேச்சாளர் அஹமட் புர்கான்

தேசிய தினமான இலங்கையின் சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் விமர்சையாக சிறப்பிக்க வேண்டும்.தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஊடக பேச்சாளர் அஹமட் புர்கான்

இலங்கை திருநாட்டின் குடிமக்கள் என்கிற வகையில் நாளை அதாவது வியாழக் கிழமை இலங்கை முஸ்லிம்கள் தங்களுடைய வாகனங்களில், வியாபார ஸ்தளங்கள், ஸ்தாபனங்களில் மற்றும்  பொது இடங்கள் காரியாலயங்களில் தேசியக் கொடியை கம்பங்களில் பறக்க விடுவதன் மூலமாக  எமது தேச பற்றை நாம் வெளிக்காட்ட வேண்டும்.

ஏனெனில் இன்று இந்த நாட்டில் முஸ்லிம்கள் வந்தேறு குடிகளாகவும் நாட்டுப் பற்றற்ற துரோகிகளாகவும் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில்  சித்தரித்து சில இனவாத மதவாத சக்திகள் எமது சமூகத்ற்கு எதிராக அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளும் இந்த சூழ்நிலையில் நாங்கள் இந்த நாட்டை சேர்ந்த குடிமக்கள் மாத்திரமல்ல இந்நாட்டை நேசிக்கும்  பற்று உடையவர்கள் என்பதையும் நாட்டின் மீதான எமது விசுவாதத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நாம்  ஏனைய சமூகங்களுக்கு உணர்த்த வேண்டிய தேவையும் அவசியத்தையும் கருத்திற் கொண்டு செயல்படுமாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி முஸ்லிம் சமூகத்திடம் வேண்டிக் கொள்கிறது.

அதுமட்டுமல்லாமல் இச்சுதந்திர தினத்தில் ஏனைய சமூகங்களுக் கிடையிலான ஐக்கியத்தையும்,, ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வழியுறுத்தும் வகையிலான எமது செயற்பாடுகளை நாம் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டுமெனவும்  அனைத்து இன சமூகம் சார்ந்தவர்களுக்கும் இந்த வேளையில் தமது கட்சியின் சார்பில் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில்  தெரிவித்துள்ளார்.

Loading...