தன்னியக்க இயந்திரத்தில் பணம் கொள்ளையிட முயற்சி;மூன்று வெளிநாட்டவர் கைது
காலி பேருந்து நிலையத்துக்கு முன்பாக உள்ள பணம் பெறும் தன்னியக்க இயந்திரத்திலிருந்து பணத்தைக் கொள்ளையிட முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டவர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் மிகவும் சந்தேகத்துக்கிடமான முறையில், சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலையடுத்து வங்கிச் சேவையாளர் அவ்விடத்தை சோதனைக்கு உட்படுத்தி குறித்த மூவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த சந்த்தேக நபர்களிடம் இருந்து வங்கிக் கணக்கு அட்டைகள் பலவும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
