பத்திரிகையாளர்களின் பாவனைக்கு என சகல நவீன வசதி களும் கொண்ட " ஊடக வளநிலையம்" ஒன்று அம்பாறை மாவட்டத்தில் தற்போது இல்லாமையினால் இவ்வாறான "ஊடக வளநிலையம்" ஓன்று உருவாக்கப் படுவதன் மூலம் ஊடகவியலாளர்கள் இவ் வலயத்தின் மூலம் சிறந்த பயன் பாட்டைப் பெறலாம் எனக் கருதுகிறேன் . மேலும் இதில் ஊடகவியல் துறை கற்கை நெறி மற்றும் பயிற்சி நெறிகளும் ஆரம்பிக்கப் படலாம் . இதை சகல பத்திரிகையாளர்கள் , ஊடகவியலாளர்கள் உரிய அதிகாரிகளிடம் முன் வைத்து ஊடக வள நிலையம் ஒன்றை பெற்றுக் கொள்ள ஆலோசனை ஒன்றை NDPHR இஸ்தபகர் மொஹிடீன் பாவா ஆகிய நான் முன்வைக்கின்றேன் . இதை சகல ஊடகவியலாளர்களும் கருத்தில் கொண்டு இதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகின்றேன்

